150 நாள்.. தினமும் ஒரு மாரத்தான் - 6,300 கி.மீ. கடந்து உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா பெண்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட்.  முப்பத்திரெண்டு வயதான இவர் முதலில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். 

இவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பின்னர், தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனம் செலுத்த தொடங்கினார். அதாவது, மாரத்தான் ஓட்டத்தின் மூலம் முழு ஆஸ்திரேலியா நாட்டையும் சுற்றி வருவதற்கு முடிவு செய்தார். 

அதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டின் ஒரு முனையில் இருந்து நாட்டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினார். 

தொடர் மாரத்தான் ஓட்டத்தால் முர்ரே, உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள் மற்றும் கால் வீக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் மாரத்தானை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடினார். 

இதைத்தொடர்ந்து, அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் என்று ஓடி சுமார் 6,300 கி.மீ. தூரத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதன் மூலம் அவர் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த கேட் ஜேடனின் சாதனையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை படைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austreliya woman world record at 150 days marathon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->