இலங்கையில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு தடை.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளது. 

போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே தஞ்சமடைந்துள்ள கடற்படைத் தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on distribution of petrol and diesel in Sri Lanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->