இந்துக்கள் மீதான தாக்குதல் : வங்காளதேச உள்துறை அமைச்சர் அளித்த பரப்பு பேட்டி.!
Bangaladesh Hindus attack issue 2022
இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் முகநூல் பதிவு தொடர்பாக இந்து சமூகத்தினரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நடத்தப்படுவதை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது. சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.
இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்". என்று வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.
English Summary
Bangaladesh Hindus attack issue 2022