ஆற்றில் கவிழ்ந்து படகு: 58 பேர் பரிதாப பலி! சோகத்தில் ஆப்பிரிக்கா.!
boat overturned river 58 people killed
மத்திய ஆப்பிரிக்கா, பாங்குய் எம்போகா ஆற்றை அங்குள்ள மக்கள் கடந்துதான் செல்ல முடியும். இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தை நம்பியுள்ளனர்.
அந்த ஆற்றில் ஏராளமான படகு சவாரிகள் செய்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் தலைவர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் ஆற்றை கடந்து படகில் புறப்பட்டனர்.
அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்ததால் குழந்தைகள், பெண்கள் என பலரும் ஆற்றில் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து உள்ளூர் மீனவர்கள் உடனடியாக ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணிகள் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் மயங்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boat overturned river 58 people killed