ஆப்கானிஸ்தான்! மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தநிலையில் மேலும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா குல் ஜான் மசூதியில், புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகைக்காக வந்திருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த குண்டுவெடிப்பின் போது மசூதியின் அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கி உள்ளன. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், முழுமையான காரணம் எதுவும் தெரியவில்லை என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast at Kabul mosque


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->