உக்ரைனுக்கு 2 வகை ஏவுகணைகள் வழங்க பிரிட்டன் பரிசீலினை..!
Britain is considering providing 2 types of missiles to Ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் நடந்த திட்டமிட்டுள்ளது. மேலும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது.
இதையடுத்து ரஷ்யாவின் பல்முனை தாக்குதலை சமாளிக்க நவீன ஆயுதங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க கடலிலிருந்து ஏவப்படும் சக்தி வாய்ந்த ஹார்பூன் வகை ஏவுகணைகளையும், வான் வழியிலிருந்து இலக்கை வேகமாக தாக்கும் ஷேடோ ஸ்ட்ரோம் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து உக்ரைன் படைகள், ரஷ்யாவிற்கு எதிராக பிரிட்டனின் நவீன புதிய ஏவுகணைகளை பயன்படுத்த தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பாதுகாப்பு அதிகாரி ஜார்ஜ் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா மும்முனை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பிரிட்டனின் இந்த உதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Britain is considering providing 2 types of missiles to Ukraine