கொளுத்தும் வெயில்- ஐரோப்பா நாடுகளில் ஒரே ஆண்டில் 61,000 பேர் பலி!
Burning heat 61000 people died in one year in Europe
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன.
ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில் கடந்த கோடைக் காலத்தில் மே 30 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை அதிக வெப்பத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில், அதிர்ச்சியளிக்கும் வகையில் வெப்பத்தால் 61,000க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24ம் தேதி வரையில் மட்டும் 11.637 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் வெப்பத்தின் கடுமையான தாக்கத்தை தாங்க முடியாமல், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
English Summary
Burning heat 61000 people died in one year in Europe