நேருக்கு நேர் மோதிய பேருந்து - லாரி: 14 பேர் பரிதாப பலி! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


வங்கதேசம், பரீத்பூர் நெடுஞ்சாலையில் இன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புபடினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus lorry collision accident 14 death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->