இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு - காரணம் என்ன?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்குத் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் மோசடியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய மாணவர்கள் சிலர், சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அப்படி சேர்ந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள இந்திய நாட்டு தூதரகம் உள்ளிட்டவற்றின் மூலமாக, கனடா நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada government expels indian student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->