அதிர்ச்சி கிளப்பிய நீதிமன்றம்! சுதந்திர போரில் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு ரத்து!
Cancellation of reservation for the heirs of the soldiers who died in the Bangladesh War of Independence
வங்காளதேசத்தில் நடைபெறும் வன்முறை எதிரொலியால் சுதந்திர போரில் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருந்து வந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக அந்த இட ஒதுக்கீடு 2018 இல் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
சமீபத்தில் மீண்டும் அந்த இட ஒதுக்கிடை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இட ஒதுக்கீட்டில் பாரபட்சமானது என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் கடந்த 16ஆம் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள போராட்டக்காரர்களுக்கும் போலீஸ் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோதல் வன்முறை களமாக மாறியது இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை எதிரொலி காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
பள்ளி, கல்லூரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும் பாதுகாக்கவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷத்தில் தொடர்ந்து நிலவும் வன்முறை காரணமாக அங்கு கல்வி பயந்து வந்த 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக இந்திய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களுக்கும் போராட்டத்திற்கு காரணமான 30 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை அந்நாட்டு உச்சநீதிமன்றம் திருப்பு வழங்கியது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையே ரத்து செய்துள்ளது. அரசு பணிகளில் தகுதியான நபர்களுக்கு 93 சதவீதமும் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு 5 சதவீதமும் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Cancellation of reservation for the heirs of the soldiers who died in the Bangladesh War of Independence