எலான் மஸ்க் தன் மகன் பெயர்  'சந்திரசேகர்' - பின்னணியில் உள்ள ஒரு இந்தியரின் சாதனை! - Seithipunal
Seithipunal


உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான  எலான் மஸ்க் தன் மகனுக்கு 'சந்திரசேகர்' என இந்தியர்களின் பெயரைச் சூட்டியுள்ளார். 

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சர்வதேச அளவில் அறிவியல் நிபுனர்களும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தனியார் நிறுவனங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.  

அப்போது எலான் மஸ்க்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பேசிக்கொண்டதாகவும், தன் மகனது பெயரும் சந்திரசேகர் என எலான் மஸ்க் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ்(X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் தன் மகனுக்கு இப்பெயரைச் சூட்ட காரணம், கடந்த 1987ல் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர், விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் தான். அவரின் நினைவாக இந்த பெயரை சூட்டியுள்ளதாகவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ்(X) பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அமைச்சரின் பதிவுக்கு பின்னூட்டம் செய்திருந்த எலான் மஸ்க்கின் நியூரா லின்க் (Neuralink) நிறுவனத்தின் இயக்குனரும், அக்குழந்தையின் தாயுமான ஷிவோன் சில்லிஸ், "உண்மைதான் எங்கள் குழந்தையை செல்லமாக சேகர் என்றே அழைக்கிறோம்" என்று ஷிவோன் சில்லிஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கிடைத்த மேலும் சில தகவலின்படி, ஷிவோன் சில்லிஸின் தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். 
எலான் மஸ்க்கும், ஷிவோன் சில்லிஸும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

இதில், ஆண் குழந்தைக்கு "ஸ்டிரைடர் சந்திரசேகர்" என்ற பெயரையும், பெண் குழந்தைக்கு அசூர் (Azure) என்ற பெயரையும் சூட்டியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrasekar Son of Elon Musk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->