கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.! 700 மில்லியன் டாலர் கடன் வழங்கிய சீனா.!!
China gives 700 million dollar to pakistan for economic crisis
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு பணம் வீக்கம் அதிகரித்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால், நாட்டின் 70% இறக்குமதி சேவைகள் தடைபட்டுள்ளன.
இதனிடையே அந்நிய செலாவணியை அதிகரிக்க நிதி வேண்டி சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சீனாவின் டெவலப்மென்ட் வங்கியிடமிருந்து 700 மில்லியன் டாலர் கடனாக பெறப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த ட்விட்டர் பதிவில், சீனாவின் இந்த நிதியுதவி அந்நியச் செலாவணி இருப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும் எனவும், இந்த நிதி பாகிஸ்தான் ஸ்டேட் வங்கிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும் காலாண்டில் சீனாவிடமிருந்து மேலும் 1300 மில்லியன் டாலர்கள் வணிகக் கடன்களாக பாகிஸ்தான் பெறும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
China gives 700 million dollar to pakistan for economic crisis