சீன, ரஷ்ய போர் விமானங்கள்.! தென்கொரியா வான் பகுதியில் பறந்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இரண்டு சீனா மற்றும் ஆறு ரஷ்யா போர் விமானங்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இரண்டு சீன H-6 குண்டுவீச்சு விமானங்கள் முதலில் நேற்று அதிகாலை 5.50-க்கு முன்னதாக வான் பாதுகாப்பு மண்டலத்தை கடந்து தென் கொரியாவின் தெற்கு மற்றும் வடகிழக்கு கடற்கரைகளில் உள்ள காடிஸ் எல்லைகளுக்கு மேல் பறந்துள்ளது.

இதையடுத்து காலை 7 மணியளவில் தென் கொரியாவிலிருந்து வெளியேறிய இரண்டு சீன குண்டுவீச்சு விமானங்களும், சுமார் ஐந்து மணி நேரம் கழித்து ரஷ்ய நான்கு TU-95 குண்டுவீச்சு பேர் விமானங்கள் மற்றும் இரண்டு SU-35 போர் விமானங்களுடன் திரும்பி 12 மணியளவில் ஜப்பான் கடல் வழியாக சியோலின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் மீது பறந்துள்ளது.

இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க F-15K ஜெட் விமானங்கள் உட்பட தென் கொரிய இராணுவ விமானங்களை பறந்தன. ஆனால் அந்த விமானங்கள் வருவதற்குள் சீனா, ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. 

மேலும் வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில், தென் கொரியா எல்லைக்குள் போர் விமானங்கள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese Russian war planes enter South Korean air defense zone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->