ஒருமித்த கருத்து எட்டப்படாததால் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஒரு நாள் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


எகிப்து நாட்டில் 27 வது சர்வதேச காலநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நவம்பர் 18 ஆம் தேதியுடன் மாநாடு நிறைவடையும் என திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் வளரும் நாடுகளுக்கு இழப்பீடு நிதியை வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டும் என்ற கொள்கை சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த மாநாட்டின் மீது உலக அளவில் அதிக எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ஆனால் சில உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்து  எட்டப்படாததால் இன்று ஒரு நாள் இந்த மாநாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டும் வரை நாட்கள் நீட்டிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு நிதி குறித்தான முழு விவரம் இடம்பெறாததால் வளரும் நாடுகள் அதிருப்தியில் இருந்தன. இந்த நிலையில் காலநிலை மாற்ற உச்சி மாநாடு நாட்கள் நீட்டி வரவேற்கத்தக்கது என வளரும் நாடுகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Climate summit extended by one day due to lack of consensus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->