கொரோனா தடுப்பு மருந்தால் பக்க விளைவு வரும்.!! அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பொதுமக்களை உலுக்கிய கொரோனா தோற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சீனாவில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து இல்லாததால் சமயத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

மேலும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதை எடுத்து 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

இந்த தடுப்பூசியின் காரணமாக சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அதனை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்தன. இதேபோன்று ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆய்வு மேற்கொண்டு புதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். 

 

இந்த நிலையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து காரணமாக பலர் உடல் நலம் பாதிக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கோவிட் சில்லு மருந்து தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் பக்க விளைவு ஏற்படுவதை ஒப்புக் கொண்டு. 

கோவிஷீல்டு மருந்து எடுத்துக் கொண்ட ஒரு சிலருக்கு அரிதான பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் thrombosis with thrombocytopenia syndrome பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இது எல்லாருக்கும் வருவதில்லை எனவும் மிகவும் அரிதாக நடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covidshield corona vaccine create rare side effects


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->