சிறுவனின் உதட்டில் முத்தம் கொடுத்த தலாய்லாமா - வலைத்தளங்களில் தீயாய் பரவும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சிறுவனின் உதட்டில் முத்தம் கொடுத்த தலாய்லாமா - வலைத்தளங்களில் தீயாய் பரவும் வீடியோ.!

நமது அண்டை நாடான திபெத் நாட்டைச் சேர்ந்தவர் தலாய்லாமா. இவர் ஒரு ஆன்மிகத் தலைவர். தற்போது இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், தலாய்லாமா ஒரு சிறுவனின் வாயில் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தலாய்லாமா தன் காலில் விழுந்த சிறுவன் ஒருவனின் வாயில் முத்தம் கொடுக்கிறார்.

மேலும், தன் நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறியுள்ளது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ட்விட்டரில் இருந்து இந்த செயல் அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது என்று உலகம் முழுவதிலும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dalailama kisses on boy lips vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->