மக்களின் குரலே கடவுளின் குரல்! மீண்டும் செயல்பட தொடங்கிய டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு! - Seithipunal
Seithipunal


கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு எதிராக முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் கலவரம் தூண்டும் வகையில் ட்விட்டரில் அதிகமாக பதிவிட்டனர். இதன் காரணமாக கோடிக்கணக்கான பாலோயர்ஸ்களை கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடுக்கப்பட்டது.

அதேபோன்று பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்த டிரம்ப்பின் கணக்கு முடுக்கப்பட்டது. இதனால் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் என்ற புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தினார். அதிலும் அவருக்கு அதிகமான ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்கிடம் மீண்டும் டெனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு மீட்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வந்தது. இதற்கு எலான் மஸ்க் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்பது குறித்து ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் ட்ரம்பிற்கு சாதகமாக 51.8% எதிராக 48.2% என 1,50,85,458 பேர் வாக்களித்தனர்.

இதனை அடுத்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் "மக்களே சொல்லிவிட்டார்கள். ட்ரம்பின் கணக்கு மீட்கப்படும். மக்களின் குரலே கடவுளின் குரல் என லத்தீன் மொழியில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து டிரம்பின் ட்விட்டர் கணக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டதை அடுத்து டொனால்ட் ட்ரம்ப் கணக்கில் தற்பொழுது 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோஸ்கள் இணைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump Twitter account unbanned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->