2 நாள் சுற்று பயணம் - வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு பூஜை செய்த ஜனாதிபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


2 நாள் சுற்று பயணம் - வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு பூஜை செய்த ஜனாதிபதி முர்மு.!

இந்தியாவின் குடியரசுத் தலைவரான திரவுபதி முர்மு காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொண்டார். அதற்காக நேற்று அவர் ஸ்ரீநகர் வந்தார். பின்னர் காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

இதையடுத்து முர்மு ஜம்முவில் ரியாசி மாவட்டம் காத்ரா நகரில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று சென்றார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து முர்மு, வைஷ்ணவி தேவியை வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வதி பவன் என்ற மிகப் பெரிய அறையையும் திறந்து வைத்தார். 

தனது இரண்டு நாள் காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை தலைநகர் டெல்லிக்கு திரும்பினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

droubati murmu visit vaishnavi devi temple in kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->