இந்தியா உடான பொருளாதார உறவு அதிகரிக்கும்; ஆஸ்திரேலியா பிரதமர் உறுதி..!
Economic relations with India will increase Australian Prime Minister assures
''இந்தியா உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தி வருகிறோம், '' என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; இந்தியா உடனான ஆஸ்திரேலியா உறவுானது வலிமையாகவும், ஆழமானதாகவும் மற்றும் முக்கியமானதாகவும் உள்ளது.'' எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர், ''இனி வரும் காலங்களில் இன்னும் வர உள்ளது. உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்தியா உடான பொருளாதார உறவை ஆஸ்திரேலியா ஊக்குவித்து வருகிறது'' எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ''வர்த்தகம் மற்றும் முதலீட்டை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அந்த அறிக்கையில் அந்தோணி அல்பேன்ஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியா - இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நிதிக்கு ஆஸ்திரேலியா 139.40 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியானது, ஆஸ்திரேலியா தொழிலதிபர்கள், இந்தியாவின் சந்தையில் நுழைந்து புதிய வணிக வாய்ப்புகளை திறக்க உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அத்துடன், இதற்காக, சுத்தமான எரிசக்தி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, விவசாய தொழில் மற்றும் சுற்றச்சூழல் ஆகிய துறைகளை தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. மேலும், குறித்த துறைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன், ஆஸ்திரேலியர்களுக்கு புதிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்யும் எனவும் கூறியுள்ளது.
English Summary
Economic relations with India will increase Australian Prime Minister assures