இங்கிலாந்து அரசர் மீது முட்டை வீசிய நபர் கைது.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் வடக்கு நகரமான யார்க் பகுதியில், அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா உள்ளிட்டோர் நடந்து சென்றபோது அவர்கள் மீது முட்டை வீச முயன்ற நபர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் இருவரும் மிக்லேகேட் பார் வழியாக யார்க் பகுதிக்குள் நுழைய இருந்தபோது ஈந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், அரசர் வருவதை பார்ப்பதற்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது. ஆனால், அந்த முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது பட்டதாக தெரியவில்லை. 

இதையடுத்து, முட்டைகளை வீசிய நபரை போலீசார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அந்த நபர் "இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்று சத்தமிட்டதாக பிரிட்டனின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egg throw on ingland king charles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->