ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - வைரலாகும் ரஷிய அதிபரின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் உலக ரஷிய மக்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "ரஷியாவின் பிறப்பு விகிதம் கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து வெகுவாக குறைந்து வருகிறது.

முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். ஆனால் தற்போதைய நவீன உலகில் அந்த அளவு சுருங்கியது. அதுமட்டுமல்லாமல், கடந்த 21 மாதங்களாக நடைபெறும் உக்ரைன்-ரஷியா போரினால்,
ரஷியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இந்த தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.  அதனால், இனிவரும் காலங்களில் ரஷியாவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நாட்டின் 1,000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 

ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் காணொலி மூலம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight childresn each one womans russia president viladimir putin speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->