பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடம் - 8 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் ரெசிஃப் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியும், 5 பேர் காணாமலும் போயுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பிரேசில் நாட்டிலுள்ள ரெசிஃப் நகரின் ஜங்கா பகுதியில் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடம் நேற்று  காலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டிடம் இடிந்த பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்னர். திடீரென அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததால், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples died for building collapse in brezil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->