வேலையற்ற இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை..அரச அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேலையில்லாமல் இளைஞர்கள் பலரும் திண்டாடி வருகின்றனர். அப்படி சிலருக்கு வேலை கிடைத்தாலும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என குறை கூறி வருகின்றனர்.

இதனால் இளைஞர்கள் அன்றாட உணவு, வாழ்க்கை முறையை இழந்து திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வேலையில்லா இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அல்ஜீரியா அதிபர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர். தற்போது வேலையில்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல் மத்ஜித் அறிவித்துள்ளார்.

மேலும், வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வேலையில்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று அல்ஜீரியா அதிபர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment youngsters 7500 scholarship in Algeria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->