ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவை புறக்கணிக்க இங்கிலாந்து தலைமையில் மாநாடு.! - Seithipunal
Seithipunal


33வது ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வீரர்களை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவை ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி இங்கிலாந்தின் கோரிக்கையை நிராகரித்ததால் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவை புறக்கணிக்காவிட்டால் 40 நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்காது என போலந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், 30 நாடுகளுடன் இங்கிலாந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யாவை புறக்கணிப்பது பற்றி விவாதம் செய்ய வருகின்ற 10ஆம் தேதி இங்கிலாந்து தலைமையில் சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England headed conference for boycott Russia in Olympic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->