தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவ உணவு - இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிலும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளி நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. 

அந்த வகையில், அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிபர் பைடன் தலைமையில் தீபாவளி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி அக்டோபர் 29ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் பலர் பங்கேற்றினர். 

இந்த நிகழ்ச்சியில் மதுபானம், இறைச்சி உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியில் இறைச்சி உணவு, மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக்கேட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england prime minister office say sory for nonveg in deepavali festival function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->