42 வயதில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து பெண்.! - Seithipunal
Seithipunal


42 வயதில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து பெண்.!

உலகின் பல நாடுகளிலும் தம்மைத் தாமே திருமணம் செய்துக் கொள்ளும் முறையை சில பெண்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது, கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த கஷமா பிந்து என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாரா வில்கின்சன் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.  42 வயதுடைய இவர், தன்னுடைய திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பணத்தை சேகரித்து வந்தார்.

மேலும், அவர் தன்னுடைய 40வது பிறந்த நாளில் தனக்கான துணையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், தன்னை தானே திருமணம் செய்துக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சாரா 20 ஆண்டுகளாக சேமித்து வைத்த 10 லட்ச ரூபாய் பணத்தை செலவழித்து தனது 42 வயதில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரம்மாண்டமாக திருமண விழாவைக் கொண்டாடி உள்ளார்.

இந்தத் திருமண விழாவில் மணப்பெண்ணுக்கான பிரத்யேக வெள்ளை கவுண், வைர மோதிரம், மூன்று அடுக்கு திருமண கேக், பெண் தோழிகளுக்கென்று தனி உடை என்று பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england woman got herself marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->