பிரபல அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி, பெண்கள் குழுவுடன் நாளை விண்வெளி பயணம்..! - Seithipunal
Seithipunal


1963-ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். அதன் பின்னர் தற்போது பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இவ்வாறு விண்வெளிக்கு செல்லும் குழுவில் பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி இடம்பெற்றுள்ளார். அத்துடன், முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், உயிரி விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் வருங்கால மனைவி, செய்தி தொகுப்பாளர் லாரன் சான்செஸ் என மொத்தம் 06 பெண்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


அத்துடன், விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கப்பட்ட தொழிலதிபர் ஜெப் பெசாசின் 'புளூ ஆரிஜின்' நிறுவனத்திற்கு சொந்தமான 'நியூ ஷெப்பார்டு' விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளிக்கு செல்லவுள்ளனர். 

இந்த விண்கலம் நாளை (ஏப்ரல் 14-ந்தேதி) வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous American singer Katy Perry will travel to space with a group of women tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->