ஈரானிலும் குரங்கமை பாதிப்பு, அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு..!
First monkeypox case founded in Eran
உலகின் கொரோனாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் உருவான குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால், பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறனர். இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகதாரதுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கண்டறியப்பட்டுள்ளது. 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த அந்த பெண் தனிமையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
First monkeypox case founded in Eran