முதல்முறையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து - அமெரிக்கா சாதனை.!
first time vaccine for honey bees in america
பொதுவாக எந்த ஒரு உயிரினமும் இனப்பெருக்கம் இல்லாமல் வாழாது. அந்த வகையில், தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கைகைக்கு முக்கிய பங்கு வகிப்பது தேனீக்கள் ஆகும். குறிப்பாக தாவரங்கள் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே இனப்பெருக்கம் செய்து காய், கனிகளை உற்பத்தி செய்ய முடியும்.
ஆகவே தேனீக்கள் இல்லாத இடத்தில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பதே ஆணித்தரமான உண்மை. அதன் படி, அமெரிக்காவில் உள்ளவர்கள் தங்களது வீடு மற்றும் தோட்டங்களில் தேனீக்கள் வளர்ப்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த தேனீக்களை பாக்டீரியாக்கள் தாக்குவதால், "பவுல் புரூட்" என்ற நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தேனீ வளர்ப்போருக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த நோய்க்கு தீர்வு காணும் வகையில் உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
தற்போது இந்த தடுப்பு மருந்துக்கு அமெரிக்க வேளாண்மை துறையும் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த செய்தி தேனீ வளர்ப்போரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
first time vaccine for honey bees in america