பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை.!
Former Chief Justice of Pakistan shot dead
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கரான் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அச்சமற்ற நீதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, அவரது சேவைகள் மறக்க முடியாதவை என்றும், அமைதியின் எதிரிகளின் கோழைத்தனமான தாக்குதல்கள் தேசத்தை பயமுறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவித்து முக்கிய தீர்ப்பை முஹம்மது நூர் மெஸ்கன்சாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Chief Justice of Pakistan shot dead