ஈரான் முன்னாள் அதிபரின் மகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து, ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் 400-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் அரசு தூக்குத் தண்டனை அறிவித்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், தெக்ரானில் கலவரத்தை தூண்டியதாகவும், அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமியின் மகள் பேசே ஹாஷிமி கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பேசே ஹாஷிமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது அரசுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக பேசே ஹாஷிமிக்கு சிறைத்தண்டனையும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Iranian president daughter sentenced to 5 years in prison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->