"புதினின் கைது" மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் - ரஷ்யா முன்னாள் அதிபர் எச்சரிக்கை
Former Russia president warns Putin arrest could trigger World War III
புதினை கைது செய்தால் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என்று ரஷ்யா முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில், அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதை, குழந்தைகளை நாடு கடத்துதல் என பல்வேறு குற்றங்களை ரஷ்யா புரிந்ததாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.
இதனிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்வதற்காக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாக கருதப்படும் என முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
இதை தொடர்ந்து, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்காத ஐ.சி.சி, சட்டப்பூர்வமற்ற தன்மை என்றும், ஐ.சி.சி உத்தரவு செல்லாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி எல்லைக்குள் அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் அதிபர் புதின் கைது செய்யப்பட்டால், அது ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளை தூண்டிவிட்டு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும், ரஷ்யாவின் ராக்கெட்டுகள் ஜெர்மனியை தாக்கும் என்று முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Former Russia president warns Putin arrest could trigger World War III