நியூசிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்: சீன உணவகங்களில் கோடாரி தாக்குதல் - 4 பேர் காயம்
Four injured in axe attacks at Chinese restaurants in new zealand
நியூசிலாந்தில் 3 சீன உணவகங்களுக்குள் கோடாரியுடன் நுழைந்த நபர் வாடிக்கையாளர்களை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் நேற்று (திங்கள்கிழமை) இரவு கோடாரியை ஏந்தியபடி அப்பகுதியில் உள்ள மூன்று சீன உணவகங்களுக்குள் அடுத்தடுத்து நுழைந்த நபர் ஒருவர் வாடிக்கையாளர்களை கோடரியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் ஆக்லாந்தில் உள்ள நார்த் ஷோர் மற்றும் ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கோடாரியால் தாக்குதல் நடத்திய 24 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், மற்ற மூன்று பேர் நிலையான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் இனவெறித் தூண்டுதலாகத் தெரியவில்லை என்றும், இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகக் கருதப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Four injured in axe attacks at Chinese restaurants in new zealand