நீரில் விழுந்த ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் - 4 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


நீரில் விழுந்த ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் - 4 பேர் மாயம்.!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் ராணுவ பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு திடீரென நீரில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணாமல் போயுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த போலீசார், ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று  மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் மார்ல்ஸ் தெரிவித்ததாவது, "விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த நான்கு பேரை கண்டுபிடிக்கவில்லை" என்றுத் தெரிவித்தார். 

இந்த நான்கு பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், முப்பதாயிரம் பேர் கொண்ட அமெரிக்க-ஆஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப் பயிற்சியை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples missing for helicoptar drowned in austrelia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->