14 பேரின் உயிரை பிரித்த புயல் - பீதியில் பொதுமக்கள்.!
fourteen peoples died for cyclone in argentina
அர்ஜெண்டினா நாட்டில் கடந்த சனிக்கிழமை முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த நேரத்தில், பஹியா பிளான்காவில் உள் விளையாட்டு அரங்கில் சறுக்குப் போட்டி நடத்தப்பட்டது.
அப்போது, மழை, புயல் காற்று வீசியதால் விளையாட்டு அரங்கின் சுவர் இடிந்து விழுந்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மோர்னோ நகரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இந்தக் கடும் புயல் மற்றும் கன மழையால் இதுவரைக்கும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் அருகாமை நாடான உருகுவேவும் புயல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
அந்நாட்டில் பல்வேறு இடங்களி்ல் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வீடுகள், கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் தூக்கிவீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்நாட்டில் உள்ள மக்கள் பீதியிலேயே உள்ளனர்.
English Summary
fourteen peoples died for cyclone in argentina