ரம்ஜான் காலத்தை முன்னிட்டு காசாவில் போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்..!
Gaza ceasefire for the period of Ramadan Israel approves
காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அத்துடன், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதோடு, 200 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காஸாவில் 15 மாதங்களாக நடத்திய தாக்குதலில், 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, அமலில் உள்ளது.

குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும் என்றும், ரம்ஜான் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் மாதத்தை வரவேற்கிறார்கள். இதனால், தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Gaza ceasefire for the period of Ramadan Israel approves