ஆண் உறுப்பை அறுத்து, சமைத்து சாப்பிட்ட கொடூரன்.! போலீசாரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!
GERMAN BERLIN COURT
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில், நாற்பத்தி மூன்று வயதான மெக்கானிக் ஒருவரை கொலை செய்து, அவருடைய ஆணுறுப்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் மெக்கானிக் ஒருவர் மாயமாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், காட்டுப்பகுதி ஒன்றில் அவரின் இடுப்பு எலும்பு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மனிதர்களை சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஆசிரியர்தான் இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
போலீசாரின் விசாரணையின் படி, ஸ்டீபன் என்ற அந்த கொடூரன், டேட்டிங் ஆப் மூலம் மெக்கானிக் பழகியுள்ளார். இவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆசிரியரின் வீட்டுக்கு மெக்கானிக் சென்றிருக்கிறார்.
அப்போது ஸ்டீபன், அந்த மெக்கானிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவரின் உடலை துண்டாக்கி காட்டுப்பகுதியில் வீசியிருக்கிறார். ஆனால், அவருடைய ஆண் உறுப்பை மட்டும் துண்டாக்கி சமைத்து சாப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த பெர்லின் நீதிமன்றம், அந்த கொடூரன் ஸ்டீபன்-க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், 30 ஆண்டுகாலத்தி இப்படி ஒரு வழக்கை இந்த நீதிமன்றம் எதிர்கொண்டதில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.