ஹிஜாப் அணியாததால் ரயிலில் தாக்கப்பட்ட சிறுமி திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள், ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்திற்கு அந்நாட்டில் வசித்து வரும் பெண்ணிய அமைப்பினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே சமீபத்தில் ஹிஜாப் அணியாமல் வெளியே வரும் பெண்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த ஆண்டு மக்‌ஷா அம்மினி என்பவர் ஹிஜாப் அணியாததால், காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி நாட்டின் தலைநகர் டெஹ்ரானில், ரயிலில் ஹிஜாப் இல்லாமல் பயணிக்க முயன்ற ஆர்மிதா ஜெராவண்ட் என்ற பதினாறு வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் படுகாயமடைந்தார்.

ரயிலில் அவர் மீது தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்று அஞ்சபட்ட நிலையில், படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் கோமா நிலைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகம், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. சிறுமியின் மறைவிற்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl died in eran for attack not wear hijap


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->