ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சோழர் கால அனுமன் சிலை.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சோழர் கால அனுமன் சிலை.!

இந்தியாவின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் படி இதுவரைக்கும் 251 பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சோழர் காலத்தைச் சேர்ந்த அனுமன் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டுள்ளது. 

இந்த சிலை கடத்தல் கடந்த 1961-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நிறுவனம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  

இதைத் தொடர்ந்து, இந்த சிலை கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hanuman statue rescue in austreliya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->