இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், முன்னாள் இடைக்கால பிரதமர் ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். கடந்த 14-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி (என்எம்பிபி) 159 இடங்களை வென்று பெரும்பான்மையை உறுதிப்படுத்தியது.  

இதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய தனது பதவியை ஏற்றுக்கொண்டார். அவர் கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி துறைகளின் பொறுப்பை வகிக்கின்றார். அதிபர் திசாநாயக்க தன்னிடம் நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்துக் கொண்டுள்ளார்.  

இம்முறை 22 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் மகளிர் நலத்துறை அமைச்சராகவும், ராமலிங்கம் சந்திரசேகர் கடல் வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தில்லி இந்து கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, ஆஸ்திரேலியாவில் மேல்படிப்பு மேற்கொண்டவர். பின்னர் இலங்கையின் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஹரிணி, அரசியலுக்கு இணைந்தார்.  

இந்த புதிய அமைச்சரவை, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harini Amarasuriya sworn in as Sri Lanka new Prime Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->