சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காத்தவர்! அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. 1986ம் ஆண்டு விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் டஸ்கலூசா உள்ளிட்ட நான்கு இடங்களில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி வசித்து வந்து உள்ளனர்.

தான் வசித்த அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். குடும்ப மருத்துவத்தில் மற்றும் அவசர சிகிச்சை நிபுணத்துவம் பெற்றவர். மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர். அவர் படித்த ஆந்திரா மாநிலம், மவுனகுரு பள்ளிக்கு ரூ.14 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார், தனது கிராமத்தில் கோயில் கட்டுவதற்கும் நன்கொடை அளித்துள்ளார்.

டஸ்கலூசா நகரில், மர்மநபர்களால் டாக்டர் ரமேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

டாக்டர் ரமேஷ் அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து புகழ்பெற்றவர். கொரோனா காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காப்பாற்றியவர்; இதற்காக அவருக்கு ஏராளமான விருதுகளும் வழங்கப்பட்டன. டாக்டர் தொழிலை சிறப்பாக செய்ததால், டஸ்கலூசாவில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He saved many lives by providing excellent medical services Indian doctor shot dead in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->