சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை! மக்களை மீட்கும் பணி தீவிரம்.!
Heavy rain in China south province
சீனாவில் தெற்கு பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் குவாங்டோங் மற்றும் ஹீனான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் அந்த நகரங்களும், சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
இதனால் அப்பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதோடு புயல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் யாங்ஜியாங் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மழை நீடித்து வரும் நிலையில் கூடுதலாக வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து வெள்ளக் கட்டுப்பாடு பணிகளுக்கு தேவையான அவசர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும், நாளையும் நகரங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rain in China south province