ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழை.! குயின்ஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் மோசமான வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாணத்தின் வளைகுடா பகுதியான பர்க்டவுன் நகரில் அதிகபட்சமாக 293 மிமீ மழை பதிவாகியுள்ள நிலையில், நகரில் பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து 53 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆல்பர்ட் ஆற்றின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 100 பேரை உடனடியாக வெளியேற்றும் பணியில் பேரிடர் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சுரங்க நகரமான மவுண்ட் ஈசா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் புயல் காரணமாக கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain lashesout out flood in Queensland Australia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->