என்கிட்ட அரசியல் கேள்வி கேட்காதீங்க - உதயநிதி கேள்வியால் கடுப்பான ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கடுப்புடன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு சற்று கடுப்புடன் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், உங்ககிட்ட அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, வேட்டையன் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்க்கு ரஜினி, நன்றாக வந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார்யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

அரசியல் கேள்வியும், சர்ச்சையும்:

திமுகவின் நிகழ்ச்சியில் (அமைச்சர் எ.வ வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா) கலந்துகொண்டு, அக்கட்சியின் தலைவருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் கேள்வி கேட்ட கூடாதா? இதென்ன நகைப்பை இருக்கிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், திமுக தலைவர்கள் இருக்கும் மேடையில் நின்று, திமுக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் ஒதுங்கி கொண்டு, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அறிவுரை சொல்லும் ரஜினியிடம், அரசியல் கேள்வி கேட்காமல், நடிகை தமன்னாவிடமா கேட்க முடியும் என்றும் சிலர் விமர்சித்து உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Rajinikanth DMK Udhay Deputy CM Post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->