ராக்கெட் மழை பொழியும் ஹிஸ்புல்லா.....அவசர நிலையை பிரகடனம் செய்த இஸ்ரேல்! - Seithipunal
Seithipunal


வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலில் ராணுவ அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அவ்வப்போது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையில்,  பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு லெபனானின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவும், ஹமாஸ் அமைப்பின் தலைவர் சயீத் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்,ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.  

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் ஹிஸ்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் போர் ராணுவ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hezbollah raining rockets Israel decMissilelared a state of emergency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->