அமெரிக்கா : பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா : பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு.!

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பட்டாசுகளுடன் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இந்த பண்டிகையை இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் வசிக்கும் அனைத்து இந்து மக்களும் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில்  அமெரிக்கா நாட்டில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கொண்டாடி இருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாணத்தின் மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். 

அதன் பின்னர், இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றி இதன்மூலம் அந்த மாகாணத்தில் தீபாவளிப் பண்டிகை நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

holiday to deepavali festival in america bensilvoniya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->