உக்ரைன் சபோரிஜியா நகர் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.! ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் சபோரிஜியா நகர் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.

இதனால் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் முயற்சியில், 3 லட்சம் ராணுவ வீரர்களை அணி திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகர் மீது ரஷ்ய படைகள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Houses and buildings damaged in zaporizhia due to Russia attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->