சர்வதேச உழைப்பாளர் தினம்.. எதனால் உருவானது.. யாரால் உருவானது தெரியுமா.? - Seithipunal
Seithipunal


18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேர கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் இருந்து குரல்களும் எழுந்தது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். இந்த சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

அதனைத் தொடர்ந்து, 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. இந்த கூட்டத்தில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கார்ல் மாக்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவல் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. அன்று முதல் மே 1-ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to create labour day in May 1


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->