100 நாள் வேலை ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் - மல்லிகார்ஜுனே கார்கே உறுதி.!
hundrad days work salary increase congress leader mallikarjune karkhe
கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற பெண்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை 100 நாள் வேலை என்று பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும்.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
”அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
hundrad days work salary increase congress leader mallikarjune karkhe