ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷ்யாவில் தனது வணிகத்தை நிறுத்திய ஐ.பி.எம் நிறுவனம்.!
IBM ceases business in Russia
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவில் தங்கள் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.
அதனைத்தொடர்ந்து பிரபல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இன்டல், எச்பி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதில், நேற்று டிக் டாக் மற்றும் நெட்பிளிக்ஸ் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். அறிவித்துள்ளது. முன்னணி அமெரிக்க கணினி உற்பத்தியாளரான ஐ.பி.எம். அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் சந்தையின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது.
English Summary
IBM ceases business in Russia